Published on 29/12/2019 | Edited on 29/12/2019
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததாக காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்திக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராடி கைதான 2 பேரின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி லக்னோ சென்றுள்ளார்.
அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் கட்சி பிரமுகரின் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரியங்கா காந்தி ஹெல்மெட் அணியவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவருக்கு 6,100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது லக்னோ காவல்துறை.