60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள், தொழில்முனைவோர், சிறு வர்த்தகர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்.
இரண்டாவது முறையை பாஜக ஆட்சியமைத்த பிறகு, 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க ‘பிரதம மந்திரி கிஷான் பென்ஷன் யோஜனா’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதே போன்று சிறு வர்த்தகர்களுக்கும் கடை வியாபாரிகளுக்கும் ‘பிரதம மந்திரி லெகு வியாபாரி மான் தன் யோஜனா’ என்ற பெயரிலும், சுய வேலையில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு ‘சுவரோஜ்கார் பென்ஷன் யோஜனா’ என்ற பெயரிலும் ஓய்வூதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.
இந்த திட்டத்தின் படி 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள், மாதந்தோறும் வயதுக்கு ஏற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை பிரிமியம் கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு 60 வயது நிறைவடைந்தவுடன் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். நேற்று இந்த திட்டத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பயனாளிகள் சிலருக்கு விழா மேடையில் அடையாள அட்டைகளை வழங்கினார்.