Published on 30/04/2019 | Edited on 30/04/2019
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறி மெதுவாக நகர்ந்து ஒடிஸாவை நோக்கி செல்கிறது.
மிக தீவிர புயலான இது அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று எனவும், இது தமிழகத்தில் கரையை கடக்கலாம் எனவும் முதலில் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பின்னர் காற்றின் திசை மாறி தற்போது ஒடிஸாவை நோக்கி இந்த புயல் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் வரும் மே 3 ஆம் தேதி இந்த புயல் ஒடிசாவில் பூரி மாவட்டத்தில் கரையை கடக்கலாம் என வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.