Published on 27/04/2019 | Edited on 27/04/2019
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் 100 டிகிரி அளவில் சுட்டெரித்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்று சுழற்சியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

இந்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து புயலாக தமிழகத்தில் கரையேறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலைப்படி தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த மண்டலம் இன்று அடர்ந்த காற்றழுத்தமண்டலமாக மாறியுள்ளது. மேலும் இன்று மாலைக்குள் இது புயலாகவும் நாளை தீவிர புயலாகவும் மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.