Skip to main content

ஃபானி புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கு பிரச்சாரத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி !

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

ஒடிசாவில் இருந்து ஃபானி புயலானது மேற்கு வங்கம் நோக்கி நகர தொடங்கியது . இதன் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்தார் . மேலும் கொல்கத்தா கடலோர பகுதிகளான காரக்பூரிலிருந்து   புயல் குறித்து மேற்கு வங்க முதல்வர் தீவிரமாக கண்காணித்து வருகிறார் .ஒடிசாவில் கரையை கடந்த புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர தொடங்கியுள்ளது .

 

CANCEL ELECTION MEET

 

 

அதனை தொடர்ந்து மேற்கு வங்கத்தை புயல் அடைந்த பின்னர் புயல் மெதுவாக வலுவிழக்கும் . எனினும் நாளை புயலானது அதி தீவிர  புயலாக மாறியே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் . இந்நிலையில் உத்தரப்பிரதேஷ முதல்வர் யோகி ஆதியநாத் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார் . இதனை அடுத்து புயலால் இதுவரை ஒடிசாவில் மட்டும் சுமார் 2 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் புயலால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர் . ஒடிசாவில் அனைத்து மாவட்டத்திலும்  தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் . வரலாறு காணாத புயலால் ஒடிசா மாநிலத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

சார்ந்த செய்திகள்