Skip to main content

இளம்பெண்ணைக் கொலை செய்து எரித்த கொடூர குடும்பம்; விசாரணையில் திடுக் தகவல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A family who incident a teenage girl for love marriage

ராஜஸ்தான் மாநிலம், ஜலவார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிம்லா குஷ்வாஹா (20) எனும் இளம்பெண். இவர் ரவீந்திர பில் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஷிம்லாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் விருப்பத்தை மீறி ஷிம்லா, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பில்லை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதை அறிந்த காதல் தம்பதி, மத்தியப் பிரதேசம் என பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில். தம்பதி இருவரும் பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளனர். இதை அறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அந்த பெண்ணை, கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றுள்ளனர். இதில் பதற்றமடைந்த கணவர் ரவீந்தர பில், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரி்ல், போலீசார் விசாரணை நடத்தியதில், ஷ்மிலாவை அவரது குடும்பத்தினரே கொலை செய்து சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருக்கும் ஷிம்லாவின் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்றோர் விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை அவரது குடும்பத்தினரே கொலை செய்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்