Skip to main content

நீரிலும் பலத்தை உறுதி செய்த யானைகள்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Elephants proved their strength in water

வனப்பகுதிகளிலும் நிலப்பரப்பிலும் கம்பீரத் தோற்றமும், ஆளுமையும் கொண்ட விலங்காக திகழும் யானைகள் கூட்டம் கூட்டமாக ஆற்றைக் கடந்து செல்லும் அழகான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிலப்பரப்பிலும் வனப்பகுதியிலும் வாழ்ந்து வரும் யானைகள் அதன் பலத்தை நீரிலும் காட்ட முடியும் என உறுதி செய்துள்ளது அண்மையில் வெளியான ஒரு வீடியோ காட்சி. அசாமில் உள்ள பிரம்ம புத்திரா ஆற்றில் யானைகள் கூட்டமாக ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்திய படியும், தும்பிக்கையை உயர்த்தி நடந்த படியும் கூட்டமாக கடக்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகள் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தாயை பிரிந்த குட்டி யானை; சோக செய்தியை வெளியிட்ட வனத்துறை

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Baby elephant dies after being separated from its mother

கோவையில் தாய் யானையை பிரிந்து தவித்து வந்த குட்டி யானை உயிரிழந்து விட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் 30.05.2024 அன்று மயங்கிய நிலையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் கண்டறிந்தனர். உடன் 4 மாத குட்டி யானையும் இருந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அதே சமயம் தாயை எழுப்ப குட்டி யானையும் பாசப் போராட்டம் நடத்தியது. இதற்கிடையே தாயிடம் பால் குடிக்க முயன்ற குட்டி யானைக்கு லாக்டோஜன் மற்றும் இளநீர் போன்ற நீர் ஆகாரங்களை வனத்துறையினர் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கிரேன் மூலம் யானை தூக்கி நிறுத்தப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சையின் பலனாக கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைக்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தாய் யானைக்கு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் கொடுக்கப்பட்ட சிகிச்சை மூலம்  உடல்நலம் தேறிய நிலையில் கிரேனில் இருந்து வெளியேற்றப்பட்ட தாய் யானை வனப்பகுதிக்குள் தானாக சென்றது. ஆனால் குட்டி யானை தாய் எதிர்கொள்ளவில்லை. வனத்துறை முயற்சித்தும் தாய் யானையிடம் குட்டி யானையை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த ஒன்பதாம் தேதி மருதமலையில் இருந்து  நீலகிரி தெப்பக்காட்டுக்கு கொண்டுவரப்பட்ட குட்டி யானை, யானைகள் வளர்ப்பு முகாமில் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

இரண்டு நாள் தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்ட சிறுவனின் உடல்; கொள்ளிடத்தில் சோகம்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
 Boy's body recovered after two-day search; Tragedy in kollidam

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான பத்தாம் வகுப்பு மாணவனை தீயணைப்பு படையினர் தேடிவந்த நிலையில் இன்று சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

திருச்சி கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகில் சுமார் 6 அடி உயரத் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் பகுதியில் குளிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த சாம்ரோசன் என்ற மாணவன் நண்பர்களுடன் நேற்று மதியம் தடுப்பணையில் நிரம்பியுள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென சிறுவன் சாம்ரோசன் காணாமல்போன நிலையில் பதற்றமடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மீட்புப் படையினர் தொடர்ந்து சிறுவனைத் தேடி வந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்றிலிருந்து மீட்புப் படையினர் தேடிவந்த நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்படாத நிலை இருந்தது. இரண்டாவது நாளாக இன்றும் தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஸ்கூபா டைவிங் வீரர்களும் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு நாள் தேடுதலுக்கு பின் சிறுவன் சாம் ரோசன் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.