இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் தெரிவில்லை.