விரைவில் ஆதாரோடு இணையப்போகும் ஓட்டுநர் உரிமம்!
கூடியவிரைவில் ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமன் இணைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் நடைபெற்ற டிஜிட்டல் ஹரியானா மாநாடு 2017-ல் கலந்துகொண்டு பேசிய அவர், ஆதார் என்பது டிஜிட்டல் அடையாளம். ஆதாரை ஓட்டுநர் உரிமத்தோடு இணைப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறோம். கறுப்புப்பணத்தை வெள்ளையாக்காமல் தடுப்பதற்காக ஆதாருடன் பான் எண்ணை இணைத்தோம். டிஜிட்டல் நிர்வாகமே தரமான நிர்வாகமாக இருக்கும். டிஜிட்டல் நிர்வாகமே வெளிப்படையான, நேர்மையான மற்றும் தரமான நிர்வாகத்தை அமைக்கும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
- ச.ப.மதிவாணன்