Skip to main content

உங்கள் ரூபாய் நோட்டுகளை சுத்தப்படுத்திக்கொள்ள புதிய வழி... டி.ஆர்.டி.ஓ -வின் அறிமுகம்...

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

drdo introduces contactless sanitization machine

 

காகிதங்கள், ஆவணங்கள், மின் சாதனங்கள், ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் வகையிலான புதிய கருவி ஒன்றை பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ (DRDO) அறிமுகப்படுத்தியுள்ளது.


கரோனா பாதிப்பு காரணமாக ரூபாய் நோட்டுகள் முதல் எலக்ட்ரானிக் சாதனங்கள் வரை அனைத்தையுமே மக்கள் ஒருவித பயத்துடனேயே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலமும் கரோனா பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மக்களின் இந்த பயத்தை போக்கும் நோக்குடன் காகிதங்கள், ஆவணங்கள், மின் சாதனங்கள், ரூபாய் நோட்டுக்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் ‘ஆட்டோமேட்டட் காண்டேக்ட்லெஸ் சானிட்டைஷன் கேபினெட்’டை அறிமுகப்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள டி.ஆர்.டி.ஓ அமைப்பு. 

 

 


Defence reasearch ultraviolet sanitiser என்னும் இந்தக் கருவிக்குள், மொபைல்ஃபோன்கள், மடிக்கணினிகள், ஐபோட்கள், வங்கி ரசீதுகள், ரூபாய் நோட்டுகள், கையடக்க மின்சாதனங்கள் ஆகிய பொருட்களை வைத்து சுத்தப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஆட்டோமேட்டட் என்பதால் இயக்குபவர்கள் பக்கத்திலேயே நிற்கத் தேவையில்லை. சானிட்டைஸ் செயல்பாடுகளை செய்து முடித்தவுடன் தானாக இந்த இயந்திரம் இயக்கத்தை நிறுத்தும் வகையில் ஆட்டோமேட்டட் அமைப்பு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது டி.ஆர்.டி.ஓ.

 

 

சார்ந்த செய்திகள்