Published on 12/11/2018 | Edited on 12/11/2018
![pune](http://image.nakkheeran.in/cdn/farfuture/KIcU4w7IEPNKkM611zCHP8FytCuhyMo2HmXmISKcvOM/1542038198/sites/default/files/inline-images/pune.jpg)
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேவில் பொது இடத்தில் எச்சில் உமிழ்வோரை பிடித்து அவர்களையே சுத்தம் செய்ய வைக்கும் தண்டனையை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. புனேவை சுத்தமாக வைக்க வேண்டும் என்று அந்த மாநகராட்சி இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்த தண்டனையை அறிமுகம் செய்தபின்னர் கடந்த எட்டு நாட்களில் 156 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். மேலும் எச்சில் துப்பியவருக்கு ரூ. 150 அபராதமும் விதிக்கப்படுமாம். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர் இந்த தண்டனை தளர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.