Published on 16/08/2018 | Edited on 16/08/2018
தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் வரலாறு காணாத அளவுக்கு சரிந்து கொண்டு வருகிறது. செவ்வாய் கிழமை வர்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான மதிப்பு 70.09 ரூபாயாகச் சரிந்தது. இதுத்தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை அருண் ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும், இந்த ஏற்றத் தாழ்வுகளை அரசு தொடர்ந்து கவனித்து வருவதாகவும், மேலும் 40,270 கோடி ரூபாய் அந்நிய செலாவணி கையிருப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 11.20 நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 70.24 என வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.