நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது தூத்துக்குடி தொகுதி தி.மு.க. உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினார். அதில், ரயில்வேக்கு சொந்தமான 5 அச்சகங்கள் மூடப்படுகின்றதே அவற்றை மூட வேண்டியதற்கான தேவை என்ன? அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் "உலகமே இன்று டிஜிட்டல் மயமாகிவிட்டது". மக்கள் அனைவரும் நவீன தொழில் நுட்பத்திற்கு மாறியுள்ளன.
இதன் காரணமாக இந்திய மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்களை பதிவு செய்து, ரயில்களில் பயணம் செய்து வருகின்றன. இதனால் ரயில் நிலையத்திற்கு வந்து பொது மக்கள் டிக்கெட் எடுக்கும் போக்கு குறைந்துள்ளது. மேலும் டிக்கெட்டுகள் அச்சிடப்படுவதற்கான அச்சுச்செலவு அதிகமாகிறது. எனவே அச்சகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சகங்கள் மூடப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது என்றும், ரயில்வே துறையில் உள்ள பிற பிரிவுகளில் பணி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உறுதியளித்தார்.