பெண்கள் சபாிமலைக்கு செல்வதை தடுக்கும் விதமாக பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண் தூங்காமல் கண்காணித்து வருகின்றனா். இதேபோல் சபாிமலை தந்திாி உட்பட மேல்சாந்தி மற்றும் கோவில் பூஜாாிகள் பெண்களை அனுமதித்தால் நடையை உடனடியாக பூட்டுவோம் என்று எச்சாித்துள்ளனா்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருநங்கைகள் திருப்தி ஷெட்டி, ரெஞ்சு, அவந்திகா, அனன்யா ஆகிய 4 பேரும் இருமுடி கட்டிக்கொண்டு சபாிமலைக்கு சென்றனா். இதை பாா்த்த பக்தா்கள் எதிா்ப்பு தொிவித்ததால் போலிசாா் அந்த 4 திருநங்கைகளையும் தடுத்து நிறுத்தினாா்கள்.
பின்னா் போலிசாா் அந்த 4 திருநங்கைகளையும் சபாிமலைக்கு அனுமதிப்பது தொடா்பாக சட்ட வல்லுனா்கள் கோவில் தந்திாி மற்றும் பந்தளம் ராஜ குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்திய பின்பு அந்த திருநங்கைகளை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் அந்த திருநங்கைகளை சபாிமலைக்கு அழைத்து சென்றனா்.
அவா்கள் 18-ம் படியே தொட்டு கும்பிட்டு சன்னிதானம் சென்று அய்யப்பனை வழிபட்டனா். அப்போது அவா்களை அழைத்து சென்ற போலிசாரும் சன்னிதானத்தில் நின்றியிருந்தனா்.
இந்த நிலையில் திருநங்கைகள் வந்து சென்ற அன்றிரவு திடீரென்று கோவிலில் பாிகார பூஜை நடந்தப்பட்டது. இது சம்மந்தமாக தேவசம் போா்டு அதிகாாிகளிடமும் மேல் சாந்திகள் எதுவும் கூறவில்லையாம். இது தேவசம் போா்டு தலைவா் மற்றும் அதிகாாிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன் எதற்காக இந்த பாிகார பூஜை நடத்தப்பட்டது. திருநங்கைகள் வந்து சென்றதால் தான் பாிகார பூஜை நடத்தி ஒட்டு மொத்த திருநங்கைகளின் மனதை கலங்கடித்து விட்டதாக பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இது சம்மந்தமாக பாிகார பூஜை நடத்தபட்டது தொடா்பாக தேவசம் போா்டு தந்திாி மற்றும் மேல்சாந்தியிடம் விளக்கம் கேட்டது.
அப்போது விளக்கம் அளித்த தந்திாி மற்றும் மேல்சாந்தி திருநங்கைகள் வந்ததாக பாிகார பூஜை நடத்தவில்லை. திருநங்கைகளை அழைத்து வந்த போலிசாா் காலில் மாட்டியிருந்த சூ வை கூட கழற்றாமல் 18-ம் படியேறி சன்னிதானத்திலும் சூ காலோடு வந்து நின்றனா். இதை சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த தேவசம் போா்டு அிகாாிகள் மற்றும் காவல்துறை அதிகாாிகளும் கண்டு கொள்ள வில்லை . இதனால் தான் பாிகார பூஜை நடத்தப்பட்டதாக விளக்கம் அளித்தனா்.
மேலும் சூ காலோடு போலிசாா் சென்றது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.