publive-image

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பவோ, பிரசுரம் செய்யவோ கூடாது. ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நிதிச் சிக்கலையும் உருவாக்குகிறது. பந்தயம் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆன்லைன் சூதாட்டங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வலைத்தளங்கள், இணைய ஊடகங்களும், மக்கள் நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடக் கூடாது என அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.