Skip to main content

இந்துத்துவவாதிகளின் எதிர்ப்புகளையும் மீறி பசு குண்டர்களால் கொல்லப்பட்டவருக்கு மரியாதை!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
இந்துத்துவவாதிகளின் எதிர்ப்புகளையும் மீறி பசு குண்டர்களால் கொல்லப்பட்டவருக்கு மரியாதை!

பசு குண்டர்களால் கொல்லப்பட்ட பெகுலுகான் என்பவரது சமாதிக்கு மரியாதை செலுத்தவந்த சமூக செயல்பாட்டாளர்களை, இந்துத்துவவாதிகள் எதிர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி பெகுலுகான் எனும் நபர் பசு குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தலித் மற்றும் இஸ்லாமியர்களின் மீது பசுக்களின் பெயரைச் சொல்லி நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதலாகவே பார்க்கப்பட்டது. மேலும், இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ராஜஸ்தானின் பெக்ரோர் பகுதியில் இருக்கும் பெகுலுகானின் சமாதிக்கு மரியாதை செலுத்த, ஹர்ஷ் மந்திர் என்பவர் தலைமையிலான கார்வன்-இ-மொகாபத் என்ற குழு சென்றுள்ளனர். இந்தக்குழு பெகுலிகானுக்கு மரியாதை செலுத்தக்கூடாதென இந்துத்துவவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தாலும் விட்டுக்கொடுக்காத மந்திர், காவல்துறை உயரதிகாரியைச் சந்தித்து கண்டிப்பாக பெகுலிகானுக்கு மரியாதை செலுத்தாமல் இடத்தை காலி செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளார். அதேசமயம், ஹர்ஷ் மந்திரைச் சூழ்ந்துகொண்ட இந்துத்துவாதிகள், ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா கி ஜே’ போன்ற முழக்கங்களையும், ‘பெகுலிகான் என்ன சுபாஷ் சந்திர போஸா? அல்லது எல்லையில் கஷ்டப்படுபவரா?’ போன்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

பின்னர், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஹர்ஷ் மந்திர் மற்றும் அவரது குழுவினர் பெகுலிகான் மற்றும் நாடு முழுவதும் பசு குண்டர்களால் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

- ச.ப.மதிவாணன்  

சார்ந்த செய்திகள்