Skip to main content

பாஜக அரசு தடையை தகர்த்து வெளிவந்தது தேசர்கதா நாளிதழ்!

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
desarkatha


திரிபுரா மாநிலத்தில் 40 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை தேசர்கதா. நாளிதழாக வெளிவந்துகொண்டிருந்த அந்த பத்திரிகையை புதிதாக அங்கு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு முடக்க நினைத்தது. அந்தப் பத்திரிகை, பத்திரிகைகள் பதிவு விதிகளை மீறியிருப்பதாக காரணம் காட்டி, பத்திரிகையின் பதிவை ரத்து செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மூலமாக உத்தரவு பிறப்பிக்கச் செய்தது.
 

இதையடுத்து கடந்த 10 நாட்களாக அந்த பத்திரிகை வெளிவரவில்லை. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை இன்று காலை வெளிவந்தது.

சார்ந்த செய்திகள்