Skip to main content

நொய்டாவில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடம் வெடி வைத்து தகர்ப்பு!

Published on 28/08/2022 | Edited on 28/08/2022

 

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் விதிமீறி கட்டப்பட்ட சூப்பர் டெக்ஸ் என்ற இரட்டை கட்டடங்கள் இன்று வெடிவைத்து தகர்க்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று மதியம் சுமார் 2.30 மணிக்கு டெட்டனைட்டருடன் இணைத்து இக்கட்டடம் தகர்க்கப்பட்டது. 32 மாடியுடன் 328 அடி உயரத்தில் அபெக்ஸ் என்ற பெயரில் கட்டப்பட்ட கட்டடமும்,  31 மாடியுடன் 318 அடி உயரத்தில் சியான் என்ற பெயரில் கட்டப்பட்ட கட்டடமும் விதியை மீறி கட்டப்பட்டதால் இன்று இடிக்கப்பட்டது. இதற்காக 3,700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தப்பட்டன. கட்டடத்தின் தூண்களின்  வெளிப்புறத்தில் வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட நிலையில் 'எடிஃபைஸ்'  என்ற பொறியியல் நிறுவனம் கட்டடத்தை இடிக்கும் பணியை முடித்துள்ளது.

 

கட்டட இடிப்பின்போது சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்