Skip to main content

டெல்லி கலவரம்; அவசர உதவி கேட்ட எம்.பி... கண்டுகொள்ளாத காவல்துறை...

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கலவரத்தின் போது தனது புகாருக்கு டெல்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிரோமணி அகாலிதளம் எம்பி நரேஷ் குஜ்ரால் குற்றம்சாட்டியுள்ளார்.

 

delhi mp letter to amitshah

 

 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக 16 இஸ்லாமியர்கள் வீடு ஒன்றில்  தஞ்சம் அடைந்ததாகவும், அப்போது அவர்களை தாக்க ஒரு கும்பல் அந்த வீட்டின் கதவினை உடைக்க முற்பட்டதாகவும் தெரிவித்துள்ள அவர், இது குறித்து தெரிவிக்க காவல்துறையை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத காவல்துறை, தான் ஒரு எம்.பி என கூறியும் தனது புகாரை அலட்சியம் செய்ததாக அமித்ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அங்கு ஒளிந்திருந்த இஸ்லாமியர்களுக்கு அங்கிருந்த இந்து மக்களே உதவிக்கரம் நீட்டினார்கள் என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்