Skip to main content

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி நீதிமன்றம்...

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

கடந்த 2007ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 

chidambaram

 

 

இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என இன்றைய வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன் ஜாமீன் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ப.சிதம்பரம் தரப்பிற்கு இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்