சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
இந்த கலவரங்களில் 150- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கப்படும். வன்முறையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கப்படும். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்தில் எந்தவொரு நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டும். தேசிய பாதுகாப்பு பிரச்சனையில் எந்த அரசியலுக்கும் இடமில்லை." இவ்வாறு முதல்வர் பேசினார்.