Skip to main content

மீண்டும் போலீஸார் போராட்டக்காரர்கள் இடையே மோதல்! 66 அடி சாலை மூடல்! 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது.
 

delhi clash

 

 

இந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசு மற்றும் உள்துறை அமைச்சரை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களோடு சேர்ந்து மாணவர்களும் போராட்டங்களை துவங்கியுள்ளனர். 

குறிப்பாக இந்திய தலைநகர் டெல்லியில் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் 16ஆம் தேதி முதல் போராட்டங்கள் ஈடுபட்டனர். பின்னர் அங்கு போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மீண்டும் ஜாபர்பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் - காவல்துறை இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்த  போராட்டம் காரணமாக சீலாம்பூர் - ஜாபர்பாத் இடையேயான 66 அடி சாலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

சார்ந்த செய்திகள்