64 வயதான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்றத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் ஒருவர் பாலியல் குற்றம் சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ரஞ்சன் கோகாய், சில முக்கிய வழக்குகளை வரும் வாரங்களில் கையாள உள்ளதால் கூட இது போல குற்றச்சாட்டுகள் எழலாம் என கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதியை சிக்க வைக்க சதி நடப்பதாக வழக்கறிஞர் உஸ்தவ் பெய்ன்ஸ் என்பவர் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது சிபிஐ தலைவர், உளவுத்துறை தலைவர், டெல்லி போலீஸ் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இது குறித்து தற்போது கருத்து கூறியுள்ள நீதிபதி மிஷ்ரா, "தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை கண்டறியவில்லை எனில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை போய்விடும்" என காட்டமாக தெரிவித்துள்ளார்.