Skip to main content

முதல் டோஸ் கோவாக்சின்...மூக்கு வழி தடுப்பூசி இரண்டாவது டோஸ் - சோதனைக்கு இந்தியா அனுமதி!

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

BHRAT BIOTECH

 

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவக்சினை தயாரிக்கும் பாரத் பயோ-டெக் மூக்கின் வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பூசி ஒன்றை செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் மருத்துவப் பள்ளியுடன் இணைந்து தயாரித்துள்ளது.

 

இந்த மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பூசி,தற்போது இரண்டாம் கட்ட ஆய்வக பரிசோதனையில் உள்ளது. இந்தநிலையில் அண்மையில், முதல் டோஸாக கோவாக்சின் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்துவது குறித்து சோதனை நடத்த அனுமதி கேட்டு பாரத் பயோ-டெக் நிறுவனம் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தது.

 

இந்தநிலையில் முதல் டோஸாக கோவாக்சின் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்திருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்