Published on 30/09/2020 | Edited on 30/09/2020
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசு ஐந்தாம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.