தலித் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்: போலீசாரிடம் புகார்
ஹைதராபாத்: அய்லையா தனது புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் தொலைபேசியில் அழைத்து கடுமையான வார்த்தைகளில் திட்டுவதாகவும், கொலை மிரட்டல்கள் விடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மிரட்டல்கள் (வைஸ்சியர்கள் சமுதாய கடத்தல்காரர்கள்) எனும் தலைப்பு கொண்ட நூலை தான் எழுதியதை ஒட்டியே நடப்பதாகவும் அவர் கூறினார். தொலைபேசி அழைப்புகள் மட்டுமில்லாது தெருக்களிலும் அச்சப்படத்தக்க செயல்கள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் 506 குற்றவியல் மிரட்டல் பிரிவின் கீழ் அடையாளம் தெரியாத நபர்களின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையும் துவங்கியுள்ளது.
எனினும் ஆரிய வைஸ்சிய சங்கத்தினர் இப்புத்தகம் தங்கள் சமூகத்தை பற்றி தவறாக, கீழ்மையாக விமர்சிப்பதாக கூறி புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். மேலும் அய்லையாவிற்கு எதிராக போலீசாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர். போலீசார் இது குறித்து விசாரித்து வருவதால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.