இத்தனை ஆண்டுகள் நான் உண்டு எனது குழந்தைகள் உண்டு என்று வீட்டில் இருந்தேன். ஆனால், இந்தியாவும் இந்திய அரசியல் சட்டமும் ஆபத்தில் இருப்பதால்தான் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தேன் என்று உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி காங்கிரஸ் தேர்தல் பிரச்சார பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார். நடந்தும், படகில் சென்றும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.
எதற்கெடுத்தாலும் காங்கிரஸையே குற்றம்சொல்லும் மோடியைப் பார்த்து, “நீங்கள் என்ன சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் முட்டாள்களல்ல. இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனைகளை பட்டியலிடுங்கள்” என்று சமீபத்தில் பிரியங்கா மோடியை நோக்கி வினா தொடுத்தார். அதற்கு சரியான பதிலை இதுவரை மோடி கூறவில்லை. இன்னமும் காங்கிரஸை குறை கூறுவதையே தனது பாணியாக கொண்டிருக்கிறார் மோடி.