Published on 28/11/2020 | Edited on 28/11/2020

கரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/11/2020) மூன்று இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார்.
அகமதாபாத்தில் சைடஸ் பயோடெக் பார்க், ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார். அதேபோல் புனேவில் சீரம் இன்ஸ்ட்டியூட் தயாரிக்கும் தடுப்பு மருந்து பற்றியும் நேரில் சென்று ஆய்வு செய்கிறார். இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் கரோனா தடுப்பு மருந்துகள் கிடைத்துவிடும் என கூறப்பட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.