Skip to main content

கரோனா தொற்று எப்படி பரவுகிறது?

Published on 28/05/2021 | Edited on 28/05/2021

 

CORONAVIRUS PREVENTION PEOPLES FOLLOW THE INSTRUCTION

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது சற்று குறைந்துவருகிறது. இது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. 

 

பொதுமக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிவருகின்றன.

 

இந்த நிலையில், பேசினாலே கரோனா தொற்று பரவ வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எவ்வாறு தொற்று பரவுகிறது? என்பது குறித்து பார்ப்போம். 

 

1. நல்ல காற்றோட்டம் உள்ள பகுதிகளில் மக்கள் இருப்பது நல்லது. 

2. காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

3. வீடுகளில் ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.

4. கரோனாவால் பாதிக்கப்பட்டவர் தும்மினால், இருமினால் மற்றவர்களுக்குப் பரவும். 

5. கரோனாவால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும், இருமும்போதும் எச்சில் துகள்கள் வெளியாகும். 

6. எச்சில் துகள்கள் காற்றில் பரவி, அதைச் சுவாசிப்பவர்களுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. 

7. தும்மும்போதும், பேசும்போதும், இருமும்போதும் எச்சில் துகள்கள் வெளிப்படும்.

8. பெரிய எச்சில் துகள்கள் இரண்டு மீட்டர் தூரத்துக்குள் கீழே விழுந்துவிடும்.

9. ஏரோசோல் என்ற எச்சிலின் சிறிய துகள்கள் காற்றில் 10 மீட்டர் தூரம்வரை பரவும். 

10. ஏரோசோல்கள் அதிக நேரம் உயிருடன் இருக்கும்.

11.  காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தன் மூக்கையோ, கண்களையோ தொட்டால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. 

12. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் காற்று வசதி இல்லாத இடங்களில் ஏரோசோல்கள் விழுந்தால் வைரஸ் தொற்று வேகமாகப் பரவும்.

13. வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

14. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்