![coronavirus prevention containment zones union health ministry](http://image.nakkheeran.in/cdn/farfuture/PB3DLwpY7Gr-YRXIlGL-ihotCaMocwg9OmOHZ8tOk8M/1611757859/sites/default/files/inline-images/MINISTRY456_0.jpg)
கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில், "நாடு முழுவதும் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பிப்ரவரி 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொது மக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கிருமிநாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் சானிடைசர் வைக்க வேண்டும். மேலும், 50% அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.