Published on 01/07/2020 | Edited on 01/07/2020

நாடு முழுவதும் நேற்று வரை (30/06/2020) மொத்தம் 88,26,585 கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
அதேபோல் நாடு முழுவதும் நேற்று (30/06/2020) மட்டும் 2,17,931 மாதிரிகள் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (30/06/2020) வரை மொத்தம் 11,70,683 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.