சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 190 நாடுகளுக்குமேல் பரவி, உலக அளவில் அச்சுறுத்தலையும், பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரின் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு மட்டுமின்றி அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கரோனா தொற்றால் இதுவரை 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.