Skip to main content

இந்தியாவில் இதுவரை 23.27 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021
hj

 

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.

 

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 23.27 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமெரிக்க மக்கள் தொகை வெறும் 34 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்