உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருந்து வருகின்றது. தற்போது கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்து வருகின்றது. இந்தியா முழுவதும் தினம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இதுவரை 1 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.