இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை (08.05.2021) முதல் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரேநாளில் இத்தனை பேருக்கு கரோனா உறுதிசெய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு நேற்று முன்தினம் 4 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 915 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.