![Corona infection in 3.22 crore people so far-Indian corona status!](http://image.nakkheeran.in/cdn/farfuture/6ArBsLH0iNzGl8_l9GjvH0_tNPBOH--6p5fWTpWhyv4/1629260251/sites/default/files/inline-images/000_21.jpg)
இந்தியாவில் இதுவரை 3.22 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (18.08.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு 3,22,85,857 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் இந்தியா முழுவதும் 35,178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் 37,169 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,14,85,923 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.51 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.34 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 440 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,32,519 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 3,67,415 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல் இதுவரை 49.84 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 55,05,075 கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இதுவரை போடப்பட்ட கரோனா தடுப்பூசி எண்ணிக்கை 56.06 கோடியாக உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இதுவரை 2,73,89,694 கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.