சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேலும், இந்த ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.