செல்போனுக்கு பதில் சோப்புக்கட்டிகள்! - இணைய வர்த்தக பரிதாபங்கள்
இந்திய வர்த்தகத்துறையில் ஆன்லைன் வணிகத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. என்னதான் வளர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல பிரச்சனைகளும் இருக்கதான் செய்கிறது. உயர்ரக ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த ஒருவருக்கு சோப்புக்கட்டிகள் வந்ததும் இதற்கு ஒரு உதாரணம்.
டெல்லியைச் சேர்ந்த சீரக் தவான் என்பவர் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் இணைய வர்த்தக தளத்தில் வாங்கியிருக்கிறார். செப்டம்பர் 11ஆம் தேதி குறிப்பிட்ட முகவரிக்கு வந்த பார்சலுக்குள் மூன்று சோப்புக்கட்டிகள் இருந்துள்ளன. இதையடுத்து ஆத்திரமடைந்த தவான் முகநூல் பக்கத்தில் இதுகுறித்து கோபமாக பதிவிட்டிருந்தார். இது பல ஆயிரக்கான ஷேர்களுடன் வைரல் செய்தியாகவும் ஆனது.
பின்னர் அமேசான் தரப்பில் இருந்து ஆர்டர் செய்த பொருளை உடனடியாக அனுப்புவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்