நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமியை கொல்லாமல் விட்ட கருணைக்காக நீதிமன்றம் ஆயுள் தண்டனையை 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராப்சிங் என்பவன் கடந்த 2007 ஆம் ஆண்டு நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டான். அவனுக்கு இந்தூர் கிளை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த குற்றவாளி ராப்சிங் தனது தண்டனையை குறைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தான். இந்த வழக்கில் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது கொல்லாமல் விட்ட கருணைக்காக வழங்கிய ஆயுள் தண்டனையை 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.