கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து அரசு அமைக்க பாஜக முயற்சி செய்கிறது. இதை தடுக்க, காங்கிரஸ் முன்கூட்டியே மதசார்பற்ற ஜனதாதளத்தை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மாநிலங்களில் பாஜகவை தனிமைப்படுத்த மதசார்பற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்க காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. மாநாட்டிலேயே இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்தார். கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால், மதசார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி மேற்கொள்கிறது.
காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைக்காது என்று கருதப்பட்ட நிலையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸுக்கு சங்கடம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு இரண்டு வாய்ப்புகளை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. இது பாஜகவுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.