Published on 01/04/2019 | Edited on 01/04/2019
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு மொத்தத்துக்குமான அறிக்கையாக வெளியாக உள்ள இதில் பல மக்கள் வளர்ச்சி திட்டங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையானது நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.