Skip to main content

பிரதமருக்கு நேரில் ஆறுதல்; டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

Condolences to the Prime Minister in person; Chief Minister Stalin goes to Delhi

 

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரைப் பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார்.அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

 

பிரதமரின் தாயார் மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். பிரதமரின் தாயார் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு,  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்றோரும் இரங்கல் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் பிரதமரின் தாயார் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்வதாக கூறப்பட்டது. எனினும் பிரதமர் குஜராத்தில் இருந்து டெல்லி செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் நாளை காலை முதல்வர் டெல்லி செல்ல உள்ளார். நாளை காலை 7 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்