மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.கவின் சின்னமான தாமரை சின்னத்தை ஆடையில் அணிந்து அக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மீது திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. அந்தப் புகாரில், ‘ஆளுநரின் நடத்தை ஜனநாயக விரோதமானது. மேலும், அவரது அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு விழுமியங்களை மீறிய செயலாகும். இது மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைப் பாதிக்கிறது.
உங்கள் அன்பான அறிவையும் கவனத்தையும் கொண்டு வரவே சி.வி. மேற்கு வங்க மாநிலத்தின் மாண்புமிகு கவர்னர் ஆனந்த போஸ், லோக்சபாவிற்கு அடுத்த பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) பிரச்சாரம் செய்ய தனது நல்ல பதவியைப் பயன்படுத்தி வருகிறார். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநர், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்ய தனது பதவியைப் பயன்படுத்தி வருகிறார். கொல்கத்தாவின் சென்ட்ரல் அவென்யூவில் உள்ள ராமர் கோயிலில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டார். அப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கும் வகையில் பா.ஜ.க சின்னத்தை தனது மார்பில் அணிந்தபடி காணப்பட்டார். அதனால், மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக இந்த ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுத்து, நடந்து முடிந்த பொதுத் தேர்தலை சமன் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆளுநர் மாளிகையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் பெண் ஒருவர், ஆளுநர் சி.வி. ஆனந்த்போஸ் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை செய்து போலீசார், ஆளுநர் மாளிகையில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.