![lpg cylinder](http://image.nakkheeran.in/cdn/farfuture/su_tNd9vAO_FAroDxy74gfrAPhEtgYSfDsRxFl1QjMU/1638343115/sites/default/files/inline-images/VFREY.jpg)
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் கடந்த மாதம், வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையில் 266 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டரின் விலையில் மீண்டும் 100.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் 19 கிலோ வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டரின் விலை, 2000.50 ரூபாயிலிருந்து 2,101 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் 19 கிலோ வர்த்தக ரீதியிலான எரிவாயு சிலிண்டரின் விலையில் 101.50 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 2133 ரூபாய்க்கு விற்கப்பட்ட வர்த்தக ரீதியிலான சிலிண்டர் தற்போது 2134.40 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வின் காரணமாக, உணவகங்களில் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.