இந்தியா முழுவதிலும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. கரோனா பரவல் காரணமாகக் கர்நாடகாவில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு,ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியைப் பொது இடங்களில் கொண்டாடவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்திலும் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வீடுகளிலும் கோயில்களிலும் மட்டுமே விநாயகர் சிலை அமைக்கப்பட வேண்டுமென்றும், எந்த பகுதியிலும் தேவையற்ற கூட்டம் கூடக்கூடாது என்றும் யோகி ஆதித்தியநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான மற்றும் இனிமையான சூழலில் நடைபெற்று முடிய வேண்டும் எனவும் மக்களின் நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் யோகி ஆதித்தியநாத் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.