Skip to main content

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு... 4 பேர் உயிரிழப்பு!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

jammu kashmir

 

கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டி தீர்த்தது. இதில், அம்மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாகவும், அதுதொடர்பான சம்பவங்களாலும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 பேர் மாயமாகியுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

இதனையடுத்து, ஹொன்சார் மாவட்டத்திற்கு மீட்புப்படை விரைந்துள்ளது. இதற்கிடையே கிஷ்த்வார் மாவட்டத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், நீர்நிலைகளுக்கு அருகிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்