Published on 26/02/2022 | Edited on 26/02/2022

இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தொடர்பாகக் குழப்பம் நீடித்து வருகிறது. கிரிப்டோகரன்சி இந்தியாவில் அங்கீகரிக்கப்படாது எனத் தெரிவித்த மத்திய அரசு, அண்மையில் கிரிப்டோ சொத்துக்கள் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்படும் என அறிவித்தது.
அதேநேரத்தில் கிரிப்டோகரன்சியை தடை செய்வதா இல்லையா என்பது குறித்து ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தச்சூழலில் கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிட்காயின் சட்டப்பூர்வமானதா இல்லையா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் கிரிப்டோகரன்சி மீதான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறும் உச்சநீதிமன்றம், மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.