கடுமையான தலைவலியின் காரணமாக 15 தலைவலி நிவாரண மாத்திரைகளை ஒன்றாக உட்கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெங்களுருவில் நடந்துள்ளது.

பெங்களூருவை சேர்ந்த அனுசுயம்மா கடுமையான தலைவலிக்காக கடந்த 15 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, வழக்கம் போல அனுசுயம்மாவுக்கு தலைவலி ஏற்பட்டதையடுத்து, தலைவலி மாத்திரை போட்டுள்ளார். ஆனால் தலைவலி குறையாததால் மேலும் 14 மாத்திரைகளை எடுத்துக்கொண்டுள்ளார். மாத்திரையின் தீவிரம் அதிகமானதால் சுயநினைவை இழந்த அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் ஷோபா, அனுசுயம்மாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தலைவலியை போக்க எடுத்த விபரீத முடிவால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.