15 பக்க கடிதத்துடன் ஜார்கண்டில் ஒரே வீட்டை சேர்ந்த 7 பேர் பூட்டிய வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை அடுத்த கனகி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் உள்ள அர்சான்டி பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஷாஹ்சின்னாந்த் ஜா இவர்க்கு வயது 70. இவர் தனது மனைவி,மகன்கள், மகள்கள் உட்பட7 பேர் கூட்டுகுடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டிலுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் வந்துள்ளது. ஆனால் வீட்டிலிருந்து யாரும் வராததால் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை தட்டியுள்ளனர். மேலும் சந்தேகத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்நிலையில் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தவர்கள் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட சோதனையில் 15 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்று சிக்கியது அதில் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொள்கிறோம் என எழுதியிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் குடும்பத்தின் பல பொருளதார பிரச்சனைகள் குறித்தும் எழுதப்பட்டிருந்தது. அதில் பால் வாங்க பணம் இல்லை, மளிகை கடைக்கு பாக்கி பணம் தரவில்லை என பல பிரச்சனைகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
ஷாஹ்சின்னாந்த் ஜாவின் மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார் அப்படி இருக்க பால் கூட வாங்க முடியாத சூழல் எப்படி வந்திருக்கும். இது உண்மையில் தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.