Skip to main content

"மக்களுக்கு தேவை இதுபோன்ற அரசியல் அல்ல" - ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக சாடிய சந்திரபாபு நாயுடு...

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்பு, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.

 

chandrababu naidu on telangana capital decentralization bill

 

 

அமராவதியை சட்டசபை தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்ப்புகள் போராட்டமாக மாறி அமராவதி விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதா ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சட்டசபை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன. மசோதா தாக்கல் செய்யப்பட்ட அன்று இரு கட்சியினரும் சட்டசபை நோக்கி பேரணி சென்றனர்.

அப்போது அவர்களை வரவிடாமல் தடுக்க போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர். மேலும் சந்திரபாபு நாயுடு உட்பட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சந்திரபாபு நாயுடு, "இது ஒரு மக்கள் போராட்டம். நிர்வாகத்தை அமராவதியிலிருந்து மாற்ற யாரும் விரும்பவில்லை .நான் எனது ஆட்சி காலத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கினேன்.  ஆனால் ஜெகன்மோகன் அவற்றை ரத்து செய்துவிட்டார். மக்கள் விரும்புவது வளர்ச்சியை மட்டுமே. இந்த மாதிரியான அரசியலை அல்ல" என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்